Mug cake champignon/Mushroom mug cake/ காளான் மக் கேக்

எப்போதும் மக் கேக் தித்திப்பாக சாப்பிட்டு கொண்டிருந்தால் எப்படி? கொஞ்சம் காரமாகவும் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.

நீங்கள் இதற்கு வாங்கவேண்டியது:

  • 1மேஜைக்கரண்டி பால்
  • 1 முட்டை
  • 15 கிராம் சீஸ் பூண்டு கலந்தது/Fromage frais à l’ail
  • 1 பெரிய காளான்/champignon
  • உப்பு,மிளகுத்தூள்
  • பெர்ஸில் அல்லது வேறு ஏதாவது ஒரு herbes

தயாரிக்கலாம்:
1)முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றவும்.அதனை நன்றாக அடிகவும்.

2)உப்பு,மிளகுத்தூள் போடு கலக்கவும்.

3)சீஸ்ஸை போட்டு கலக்கவும்.

4)காளானை வெட்டி அதில் போட்டு கலந்து விடவும்.

5)மைக்ரோ அவணில் 2  நிமிடம் வேக விடவும்.

ஆரியதும் சுவைத்து சாப்பிடவும்.

copyright@mai2015 kolly2wood.blogspot.com


Comments

Popular Posts