Purée de carottes et pommes de terre/கேரட் உருளைக்கிழங்கு ப்யூரே
இதற்கு தேவையானது :
- உருளைக்கிழங்கு 3
- கேரட் 5
- பார்ஸில்/Persil
- எண்ணெய் 1 டீஸ்பூன்
செய்யும் முறை:
1)கேரட்டை தோல் சீவி வைக்கவும்.
2)உருளைக்கிழங்கின் தோலையும் சீவி வைக்கவும்.
3)தோல் சீவிய கேரட்டையும் உருளைக்கிழங்கையும் கேரட்டையும் துண்டு
துண்டாக வெட்டி வைக்கவும்.
4)வெட்டி வைத்த காய்கறிகளையும் பார்ஸிலி எண்ணெய்யையும் குக்கரில்
மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.
5)சாதாரண கசரோலாக இருந்தால்,20 நிமிடங்கள் வேகவைக்கவும். உருளைக்கிழங்கும் கேரட்டும் நன்றாக மசிக்கும் அளவுக்கு வேகவிடவும்.
6)வெந்த உருளைக்கிழங்கையும் கேரட்டையும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
வேக வைத்த காய்கறியிலிருந்து
காய்கறியை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் கொடுக்கலாம். குழந்தைக்கு ப்யூரே கொடுத்து பழகுவதற்கு
முன் இப்படி தண்ணீரை கொடுத்து பழகவும்.
ஒவ்வொரு முறையும் இப்படி வேகவைத்த தண்ணீரை கொடுத்த பிறகு காய்கறி ப்யூரைவை கொடுக்கலாம். அப்படி கொடுப்பதால், பிள்ளைக்கு காய்கறி உடம்புக்கு ஒத்து வருகிறதா? இல்லையா? என்று தெரிந்துக்கொள்ளலாம்
மிகவும் குழைவாக மசித்து
4 லிருந்து 6 மாதம் வரை கொடுக்கலாம்.
*6 முதல் 9 மாதம் வரை குழைவான ப்யூரேவாக கொடுக்காமல் முக்கால் பாகம்
அரைத்து கொடுங்கள்.
ஒரு வயதிலிருந்து வேக வைத்த காய்கறிகளை அரைத்துக்கொடுக்காமல் அப்படியே
கொடுக்கலாம்
**உப்பு இல்லாமல் 6 மாதம்வரை குழந்தைக்கு உணவு கொடுத்தால் நல்லது
என்று சொல்லுவார்கள்.
ஒரு வயதிலிருந்து கொஞ்சமாக
உப்பு சேர்த்து கொடுக்கலாம்.
copyright©Nov2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment