வாழைப்பழ பஜ்ஜி/Beignet de Bananes





      நிறைய பழங்களில் பஜ்ஜி போடலாம். ஒருமுறை ஆப்பில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்தோம். இன்னைக்கு வாழைப்பழ பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
     
      இந்த வாழைப்பழ பஜ்ஜி போடும்போது எப்பொழுதும் நான் நினைப்பது: நாம் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டோமே என்பதுதான். மீண்டும் நான் பாட விரும்புவது - சுவையான வாழைப்பழம் என்றாலும் நாம்மூரு சுவை வருமா?
     
     நம்மவூர் வாழைப்பழத்தில்எத்தனை வகைகள்! எத்தனை நிறங்கள்! எத்தனை சுவைகள்! இவையெல்லாம் விட்டு விட்டு இங்கு????
     
      இன்னும் ஒன்று என் மனதில் வாழைப்பழம் என்றால், என் நண்பி ஒருவர் வாழைப்பழம் என்றால் பிடிக்காது. 

      அவள் வீட்டிற்கு வந்தால், வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு சாப்பிடும்படி என் தம்பி அவளை வற்புறுத்துவான். அதனால் இருவரும் வீட்டில் ஒடும் பந்தையம் நடக்கும். என் சித்தி பையன் அவளை கூப்பிடுவதே வாழைப்பழ அக்கா என்றுத்தான். 

       இது எல்லாம் நினைக்கும் போது:அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பியே நண்பியே. இந்த நாள் அன்றுப்போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பியே

இதற்கு தேவையானது:

  • வாழைப்பழம் 2 அல்லது 3
  • முட்டை 2
  • *மைதா 200 கிராம்
  • பால் 100 மில்லி
  • தண்ணீர் 60 மில்லி
  • சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  • வனிலா எஸன்ஸ்
  • உப்பு
  • எண்ணெய் பொரிக்க



Beignet/பஜ்ஜி செய்யலாம் :

1)முதலில் மாவை தயாரித்துக்கொள்ளலாம்.

2)ஒரு பவுலில் முட்டையும் பாலையும் சர்க்கரையும்  நன்றாக நுரைப்பொங்க அடித்துக்கொள்ளவும்.




3)நுரைப்பொங்க அடித்து வைத்திருக்கும் முட்டையில்




மாவை போட்டு கலக்கவும்.





4)கலக்கிய மாவு சாதரணமாக பஜ்ஜி மாவு போல் இல்லாமல் கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும்.




5)பொரிக்க எண்ணெய்யை காய வைக்கவும்.

6)எண்ணெய் காய்வதற்குள்,வாழைப்பழத்தை 3 - 4 சென்டிமீட்டர் வெட்டி வைக்கவும்.

7)வெட்டிய வாழைப்பழத்தை சிறிது மைதாவில் பிரட்டி வைக்கவும்.




8)பழமும் ரெடி. மாவும் ரெடி. எண்ணெய் காய்ந்து விட்டதும்,பழத்தை மாவில் துவைத்து எண்ணெய்யில் போடவும்.

9)பஜ்ஜி சிவந்ததும்  எடுத்துவிடவும். கொஞ்சம் நேரம் விட்டாலும் கறுத்து விடும்.





சூடாக சாப்பிட்டால் தான் இது ருசியாக இருக்கும்.

மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட நன்றாக இருக்கும்.

*வெறும் மைதாவை விட self raising powder நன்றாக இருக்கும்



CopyrightNov2014©kollywood.blogspot.com

Comments