Halloween/ஹாலுவின் உங்கள் வீட்டில் செய்தீர்களா?
நாங்க ஏறக்குறைய 1998 லிருந்து பிள்ளைகளுக்காக செய்கிறோம்
.பிள்ளைகளுக்கு சந்தோஷம் என்றால் நாம் பிள்ளைகளை பார்த்து நாம்
சந்தோஷ படவேண்டும் அல்லவா?
பையனை பார்க்க இந்தியாவிலிருந்து என் அம்மாவும் தம்பியும் இங்கு
வந்திருந்தார்கள். அப்போது என் மகளை கடைக்கு அழைத்து சென்றான்,
அப்போது என் மகளுக்கு சிறுயாதாக ஒரு பூசணிக்காயில் ஒரு கோஸ்ட் இருப்பது போல் ஹாலுவின் பொம்மை வாங்கிக்கொடுத்து அழைத்து வந்தான்.
அப்போது ஆரம்பித்தது ஹாலுவின்.
ஒரு சின்ன பொம்மையில் ஆரம்பித்து இப்போது வளர்ந்து வருடாவருடம்
செய்கிறோம்.
செய்கிறோம்.
ஹாலுவினுக்கு என் பிள்ளைகளின் நண்பர்கள் வருவார்கள். எல்லாரும்
சேர்ந்து எல்லோருக்கும் பயம் வருமாறு உடைகள் மற்றும் முகதில்
மேக்கப் செய்துக்கொண்டு,வீட்டிற்கு வீடு போய் மிட்டாய் கேட்டு வாங்கி
வருவார்கள். வாங்கிய மிட்டாய்களை பிறகு ஆளுக்கு கொஞ்சமாக
பிரித்துக்கொள்வார்கள்.
ஹாலுவினின் சரித்திரம் நான் கேள்வி பட்டதிலிருந்து சொல்கிறேன்.
ஹாலுவின் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு போனதுதான்.
கி.மு 2000 வருடதிற்கு முன்பு,,celtesசெல்த் என்னும் பழைய காலத்து மக்கள்
ஐரோப்பா நாட்டில் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.அயர்லாந்து,பிராஸில் இப்போதுள்ள பிரதோன் போன்ற இடங்களில் செலஸ்ட் மக்கள் கொண்டாடினர். ஹாலுவின் என்பதை
வருட பிறப்பு விழாவாக கொண்டாடி இருக்கிறார்கள்
செல்த் இருந்த காலத்தில் ஆண்டின் முதல் மாதம் 1 நம்பரில் தொடங்கி இருக்கிறது.
அக்டோபர் மாதம் வரை தானிய வகைகளும் பழம் மற்றும் காய்கறிகளின்
விளச்சல் இருக்கும். அக்டோபர் மாததிலிருந்து சூரியன் கொஞ்சம்
கொஞ்மாக மேகத்திரையில் ஒளிந்துக்கொள்ளும்.
அதாவது குளிர் காலம் தொடங்கி விடும். அதனால் விவசாயம் குறைய
ஆரம்பிக்கும் நாளாக இருக்கும். விளைச்சல் குறைவதற்கு காரணம் சூரியன்
இல்லாததுதான்.
செல்த் இருந்த காலத்தில் ஆண்டின் முதல் மாதம் 1 நம்பரில் தொடங்கி
இருக்கிறது.
அக்டோபர் மாதம் வரை தானிய வகைகளும் பழம் மற்றும்
மக்கள் இயற்கையைதான் வழிப்பட்டனர். சூரியன் அவர்களின் கடவுளாக
இருந்தது
விளைச்சல் கொடுக்கும் சூரிய கடவுளை மேகம் மறைப்பது,இவர்களுக்கு
சூரியனை samain என்பது கைதி செய்வதாக நினைத்துக்கொண்டார்கள்.
இந்த நாளில் அவர்கள் கொண்டாடும் திருவிழாவிற்கு பெயர் païen Samain. இயற்கையின் கடவுள் – samain
இந்த விழாவின் முதல் நாள் இரவு
கெட்ட ஆவிகளை விரட்ட செல்ஸ்டர்கள் விளக்குகளை நிறுத்தி விட்டு
புது நெருப்பை அந்த வீட்டு தலைவன்
கொளுத்தி வைப்பான் அது வருடம் முழுதும் எரிய வேண்டும்.
ரோமானியர்கள் செல்த் இருக்கும் பகுதியை பிடித்து விட்டனர்.
அதன் பிறகு செல்த் எங்கு பார்த்தாலும் சிதறி விட்டார்கள்.
இருந்தாலும்,ரோமானியர்கள் இந்த விழாவை அதே பெயரில்
கொண்டாடிக்கொண்டே இருந்தார்கள்.
கொலுவா இந்த விழாவை கொண்டாடிக்கொண்டே
இருந்தார்கள்.
காலப்போக்கில் இது பிராஸில் இருக்கும் ப்ரோத்தோனில் மட்டும் இன்றும்
கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
அயர்லாந்தாலிருந்து புலன்பெயர்ந்தவர்கள்,அமெரிக்க நாட்டில் இந்த விழாவை கொண்டுசென்று இருக்கிறார்கள்.
செல்த் காலண்டர் போய் க்ரேகோரியன் காலண்டர் வரும்போது இந்த
விழாவை நவம்பர் 1ஆம் தேதி புனிதர்கள் விழாவாகவும்,
2ஆம் தேதி இறந்தவர்களின் திருநாளாகவும் கொண்டாடினார்கள்.
அதை ஆங்கிலத்தில் அமெரிக்கர்கள் நவம்பர் 1 ஆம் தேதி
All Saint's day என்றும்,
2ஆம் தேதி All Hallow's evening என்றும் கொண்டாடினார்கள்.
All Hallow's evening என்பது காலப்போக்கில்
Halloween/ஹாலுவின் என்று மாறியது.
இதுதான் Halloween/ஹாலுவின் அமெரிக்காவிலிருந்து வந்த கதை.
CopyrightNov2014©kolly2wood.blogspot.com
Comments
Post a Comment