மஞ்சள் தூள் ரொட்டி/Pain curcuma
இந்த முறை மஞ்சள்தூள் ரொட்டி எப்படி
செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருள்கள்:
- தண்ணீர்/l’eau 270 மில்லி
- ஆலிவ் எண்ணெய்/l’huile d’olive 1 c à soupe/மேஜைக்கரண்டி
- மைதா/farine 450 gm/கிராம்
- மஞ்சள்தூள்/curcuma 2 c à c/ டீஸ்பூன்
- உப்பு/sel 2 c à c/டீஸ்பூன்
- சர்க்கரை/sucre 1 c à c/டீஸ்பூன்
செய்முறை:
இது வயிற்றுக்கு நல்லது. மஞ்சள் தூள் இதில் கலந்து இருப்பதால் செரிமானதுக்கும் நல்லது.
இது நான் *MAP ல் செய்தேன். MAP இல்லாமலும் செய்யலாம்.
MAPல் செய்தால் மாவை போடுவது மட்டும் தான் நம் வேலை மற்ற வேலையை அதுவே பார்த்துக்கொள்ளும்.
இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மாவை பிசைந்து அது புளிக்க வைத்து செய்யலாம்.
அதும் நான் கொடுத்த தேவையான அளவுகள் போதும்.
நன்றாக பிசைந்து அப்படியே வைக்கவும்.
1) மைதாவில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து புளிக்க வைக்கவும்.
2) மாவு இரண்டு மடங்காக ஆனதும். திரும்பவும்நன்றாக பிசைந்து அப்படியே வைக்கவும்
3) எந்த மோல்டில் வைக்க போகிறீர்களோ அதில் வைத்து விடுங்கள். அதுவும் புளித்து மீண்டும் இரண்டு மடங்கு ஆகும்.
4) அதை உடனே முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.
230°c ல் வைத்து 20 - 25 நிமிடங்கள் வைத்து வேகவிடவும்.
5) 20 நிமிடங்கள் பொறுத்து வெந்து விட்டதா? என்று நடுவில் கத்தியால் குத்தி பார்க்கவும்.
6) மாவு ஒட்டவில்லை என்றால், வெந்து விட்டது என்று தெரிந்துக்கொள்ளலாம். ரொட்டியை வெளியே எடுத்து விடலாம்.
*MAPல் செய்வதை விட அவணில் செய்வது தனி ருசித்தான்.
மஞ்சள்தூள் ரொட்டி உடலுக்கு நல்லது. சாப்பிட்டு பாருங்கள்.
*Machine à
pain
CopyrightNov2014©kollywood.blogspot.com
Comments
Post a Comment