ப்ரன்ச் சமையல்/French Cuisine 2

    
   சீஸ் மட்டும் ஏறக்குறைய 1200 வகைகள் இங்கு இருக்கின்றது.ஒயினுக்கும் ப்ரான்ஸ் பெயர் போனது.



கஸ்த்ரோனோமி என்றால் லியோன்/ gastronomie lyonnaise ப்ரான்ஸில் முக்கிய பங்கு வகிக்கிறது.




     டார்க் சாக்லெட் என்றால் ப்ரான்ஸ்தான்.இதனை அடிபடையாக வைத்து நிறைய சாப்பாடு செய்கிறார்கள்.




     நம் நாடு போலவே இங்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்பெஷல் சாப்பாடு உண்டு.ஒவ்வொரு திருவிழாவிற்கும் ஸ்பெஷல் சாப்பாடு உண்டு.


      நமக்கு சோறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இவர்களுக்கு ரொட்டி.

     ரொட்டி என்று வந்தால் நிறைய வகைகள் இருக்கின்றன.
நிறைய பேர் வாங்குவது பகத்/Baguette என்ற ரொட்டியும் ப்ஃலித்/Flute என்ற ரொட்டியும் தான்.


  

     வித விதமான ரொட்டிகள் விற்கிறார்கள். ஒவ்வொரு ருசியாக இருக்கிறது. கோதுமையில் செய்த ரொட்டி வாங்கினால்,
அதிக நாட்கள் வைத்துக்கொள்ளமுடியும்.(Pain au seigle, Pain complet …)




     3 கோர்ஸ் சாப்பாடு சொன்னேன் அல்லவா அத்துடன் ரொட்டி
சாப்பிடுவார்கள்.

     சாதாரண நாட்களில்  3 கோர்ஸ் இருக்கும். ஒயின் குடிப்பார்கள்.
ஒயின்களும் இங்கு பலவிதம் உண்டு.

கடைசியாக ப்ளேக் காபி குடிப்பார்கள்.

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments