தாய்மை அனுபவம் 8
முக்கியமான
ஒண்ணு மறந்தே போயிட்டேங்க. அது
எப்படின்னு தெரியல. இப்போ நினைவுக்கு
வந்துவிட்டது.
இது ரொம்போ ரொம்போ அவசியமான
ஒன்று.
நமக்கு
2 பிள்ளை என்றால், நம்மிடமிருக்கும் பெரிய பிள்ளையை(களை)யும் தயார் படுத்த
வேண்டும்.
பிள்ளை
பிறக்கட்டும் என்று இருக்க கூடாது.
அம்மாவும்
அப்பாவும் சேர்ந்துதான் பிள்ளைக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
4 – 5 மாததிலிருதே வீட்டில் இருக்கும் பெரிய பிள்ளையிடம் உனக்கு
தங்கச்சியோ தம்பியோ பிறக்க போகிறது.
அம்மா வயிற்றுக்குள் நீ
குட்டியா இருந்த மாதிரியே இப்போ
அது இருக்கு. என்று சொல்லி தொட்டு
பார்க்க சொல்ல வேண்டும்.
இந்த பிள்ளையை பிறந்தவுடன் எடுத்த photo வை
எல்லாம் காட்டி, இதுப்போல் தான்
குட்டியா இருக்கும். சின்ன கை,சின்ன
கால் எல்லாம் இருக்கும். என்று
சொல்ல வேண்டும்.
பெட்டி
அடுக்குவது சொன்னேன் அல்லவா, அதுக்கூட இவர்களை
வைத்துக்கொண்டு செய்யலாம்.
நீ hospital தானே பிறந்தாய், அங்கேதான் இந்த பிள்ளையும் பிறக்கும், நான் 3,4 நாள்தான் வீட்டில் இருக்க மாட்டேன். ஆனால், உனக்கு, பெரிய cadeau தங்கச்சி (அ) தம்பி. நீ தினமும் அம்மாவையும் பிள்ளையும் வந்து பார்க்கலாம்.பாப்பா பிறந்ததும் எந்த கலர் dress போடலாம் நீயே எடுத்து வை.
நீ hospital தானே பிறந்தாய், அங்கேதான் இந்த பிள்ளையும் பிறக்கும், நான் 3,4 நாள்தான் வீட்டில் இருக்க மாட்டேன். ஆனால், உனக்கு, பெரிய cadeau தங்கச்சி (அ) தம்பி. நீ தினமும் அம்மாவையும் பிள்ளையும் வந்து பார்க்கலாம்.பாப்பா பிறந்ததும் எந்த கலர் dress போடலாம் நீயே எடுத்து வை.
நீ அம்மா அப்பாவின் செல்லம். பிறக்க போகும் பிள்ளை
உனக்குதான் ரொம்பொ செல்லம். எங்களுக்கு
எப்படியும் நீங்கள் எல்லோரும் செல்லங்கள்தான்.
வயிற்றில்
இருக்கும் பிள்ளையின் அசைவு தெரியும் போது,
அதைக்கூட பெரிய பிள்ளையிடம் கூப்பிட்டு
பாப்பா பார் உன்னை இப்போதே
விளையாட கூப்பிடுது என்று சொல்லி அதன்
சின்ன கையை உங்கள் வயிற்றின்
மீது வைத்து காட்டுங்கள்.
Echographie/Sonography எடுக்கும்போது
அழைத்து செல்லுங்கள். வெளியில் வந்ததும் சின்ன சின்ன விளக்கம்
கொடுங்கள். பாப்பா பார்த்தியா? இப்படிதான்
நீயும் இருந்தாய். என்றும் சொல்லுங்கள்.
பெயர் வைக்கும்போது இந்த பெயர் நல்ல இருக்கா? நீ எப்படி கூப்பிட போற என்று கேளுங்கள்.
Hospital க்கு பிறந்தும் பார்க்க வரும்போது செய்ய வேண்டியது. இவைகள்.
பிறக்க
போகும் பிள்ளைக்கு பெரிய பிள்ளையை விட்டே
ஒரு cadeau வாங்கி
அதை விட்டே பிள்ளை
பிறந்ததும், கொடுக்க சொல்லுங்கள்.
அதே மாதிரி பெரிய பிள்ளைக்கு
அதுக்கு பிடித்த மாதிரி ஒரு
பரிசு பொருள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அதனை பிறந்த பிள்ளை பெரிய
பிள்ளைக்கு கொடுப்பதுப்போல் கொடுத்து விடுங்கள்.
தொடர்ந்து எழுதுவேன்.
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
தொடர்ந்து எழுதுவேன்.
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment