BŒUF BOURGIGNON/பீப் புர்கிங்ஙோ



இதுவெல்லாம் வேண்டும்
  • பீப் 1கிலோ
  • ஆலிவ் எண்ணெய்/சூரியகாந்தி எண்ணெய்  5 மேஜைகரண்டி
  • வெங்காயம் 3
  • கேரட் 3
  • பூண்டு 4 பல்
  • பார்ஸி இலை
  • புக்கே கர்னி 
  • மைதா 1 மேஜைக்கரண்டி
  • ரெட் ஒயின் 1/4 ml  (வேண்டும் என்றால்)
  • உருளைக்கிழங்கு  1 கிலோ

செய்யலாம் வாங்க
கறியை துண்டுகளாக வெட்டி கழுவி வைக்கவும்.
வெங்கயத்தை வெட்டி வைக்கவும்.
கேரட்டையும் வெட்டி வைக்கவும்.
பூண்டை உரித்து வெட்டி வைக்கவும்.
எண்ணெய்யை காய வைக்கவும்
வெட்டி வைத்த கறியை போட்டு வதக்கவும்.சிவக்க வதக்கவும்.கேரட்,வெங்கயத்தையும் போட்டு வதக்கவும்.மைதாமாவையும் போடவும்.
தீயை அடக்க வேண்டாம். ஹய்யிலில் இருக்க வேண்டும். மாவை போட்டு நன்றாகாக கிண்டி விடவும். சிவந்து வர வேண்டும்.
ஓயின் ஊற்ற வேண்டும். இல்லை என்றால், 3/4 ml தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.உப்பு,மிளகுத்தூள் போடவும். 200மில்லி தண்ணீர் ஊற்றி பூண்டு நசுக்கி போட்டு காய்ந்த இலைகள் கட்டி வைத்து இருக்கிறோம் அல்லவா? அதனை போடவும் 2 மணி நேரம் வேக வைக்கவும்.
இல்லை என்றால் குக்கரில் 40-50 நிமிடங்கள்  வைக்கவும். சீக்கரமாக முடியும்.
உருளைக்கிழங்கை தனியாக அவித்து இதனுடன் சாப்பிடலாம்.

இது மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் சுலபம்.

 இங்கு நான் கொடுத்து இருப்பது 4 பேருக்கு தாராளாமாக ஒரு வேளைக்கு சாப்பிடலாம்.

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments