எனக்கு பிடித்தவை
என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில்
மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
நான் பதிலுக்குப் பதில் அடி கொடுத்தால் நாமும் அவர்களது நிலைக்கு
இறங்கி விட்டதாக ஆகி விடும்.
மேலும் உண்மை தன்னைத்தானே காத்துக்கொள்ளும்.
நாம் எதற்குத் தகுதி பெற்றுள்ளோமோ அதிலேயே
நாம் இருப்போம். பிறரை விட ஒருவருக்குத்
தகுதி அதிகமாக இருந்தால் உலகம்
அதையும் கண்டு கொள்ளும்.
நம் கைக்கு எட்டிய, நம்மால்
இயன்ற கடமைகளை நன்றாகச் செய்தால்
நம்மை நாம் அதிக வலிமையிடையவர்களாக ஆக்குகிறோம்.
இந்த
வலிமையை இவ்வாறே வளர்த்தால், பெருமைமிக்க
இந்த வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் எல்லோராலும் விரும்பத்தக்க நிலையை பெறுதற்கரிய பேற்றைப்
படிப்படியாக அடையலாம்
- விவேகனந்தர்
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள
லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில்
உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம்
நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட
லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வ முண்டு
- துன்பம்
அத்தனையும்
போக்கிவிடும் பாப்பா
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை
வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று
விட்ட போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே
பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது
வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
-சுப்பிரமணிய
பாரதியார்
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை
கோடி பெறும்"
"உண்ணீர்
உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை
கோடி பெரும்"
"கோடி
கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே
கோடி பெறும்"
"கோடானு
கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை
கோடி பெறும்"
-ஔயார்
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment