ரொட்டி/Pain de Campagne
ஃப்ராஸ்/France என்றாலே ரொட்டிதானே!
முதல் முதலாக ரொட்டி ரெசிபி
தருகிறேன். அதனால் சிரமம் இல்லாமல்,மிகவும் சுலபமாக செய்யும்
ரொட்டி முறையை சொல்லிக்கொடுக்கிறேன்.
இந்த ரொட்டி செய்வதற்க்கு நீங்கள்
கையை போட்டு மிகவும் பிசைய
தேவையில்லை.
இது கோதுமை மாவில் செய்யும்
ரொட்டி. அந்த
காலத்தில் கோதுமை மாவில்தான் ரொட்டி
செய்வார்கள். அதனால்தான் இதனை Pain de campagne என்று
சொல்கிறார்கள்.
இப்போ ரெசிபியை பார்போம்.
தேவையானது:
- 200 கிராம் மைதா மாவு
- 300 கிராம் கோதுமை மாவு
- 1 1/2 டீஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 20 கிராம் ஃப்ரஷ் ஈஸ்ட்
- 350 - 360 மில்லி வெதுவெதுப்பான தண்ணீர்
செய்முறை:
1)முதலில்
100 மில்லி தண்ணீரில் ஈஸ்ட்டை போடவும். ஈஸ்ட்
பொங்கி வரவேண்டும்.
2)மாவு சர்க்கரை உப்பு எல்லாவற்றையும் கலந்து
விடவும்.
தண்ணீரையும் ஊற்றி மரக்கரண்டியால் கிண்டி
விடவும்.
3)மரக்கரண்டியால்
நன்றாக பிரட்டி பிரட்டி கலந்து
விடவும்.
4)கலந்த மாவு கொழக்கொழப்பாகத்தான் இருக்கும்.
5)பிசைந்த
மாவை அப்படியே துணியால் மூடி வைக்கவும்.
6)20 - 30 நிமிடங்கள்
கழித்து மாவு பொங்கி இரண்டு
பங்காகி இருக்கும்.
7)பொங்கி
இருக்கும் மாவை கையால் பிசைந்து
விடவும்.
லேசாக பிசைந்தால் போதும். நன்றாக பிசைய
வேண்டும் என்று கிடையாது.
8)பிசைந்த
மாவை 8 அல்லது 9 உருண்டைகளாக உருட்டி அவணில் வைக்கும்
தட்டில் பட்டர் பேப்பர் போட்டு
வைக்கவும்.
9)உருட்டிய
மாவை அப்படியே 25 - 30 நிமிடங்கள் வைக்கவும்.
10)அவணை
230°c முற்சூடு செய்யவும்.
11)முற்சூடு
செய்த அவணில் ஒரு கிண்ணத்தில்
தண்ணீர் வைக்கவும்.
12)தட்டில்
உப்பி பொங்கி வந்திருக்கும் மாவு
உருண்டைகளை அவணில் வைக்கவும்.
13)ரொட்டி
15லிருந்து 20 நிமிடங்கள் வேகட்டும்.
14)வெந்ததும்,
ரொட்டியை அவணிலிருந்து வெளியே எடுத்துவிடவும்.
இதில் நான் சூரியகாந்தி விதை,ஃப்ளாக்ஸ் ஸீட் இதையெல்லாம் போட்டு
இருக்கிறேன்.
இது நீங்கள் வேண்டும் என்றால்
போடலாம். வேண்டாம் என்றால் போட வேண்டாம்.
இது சுலபமாக செய்யலாம். செய்த ரொட்டியை ஆறவைத்து சாப்பிடவும்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment