Bun Farcie /பன் ஃப்ர்ஸி
இந்த பன் ஏறக்குறைய Mccain Bun போல் இருக்கும்.
இது நாம் பிள்ளைகளுக்கு மதிய
சாப்பாட்டிற்கு கூட கொடுத்து அனுப்பலாம்.
இதனை முன்னதாகவே செய்து வைத்துக்கொண்டு சூடுப்படுத்தி
கொடுக்கலாம்.
இது சாயங்காலம் பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும்
கொடுக்கலாம்.
நீங்களும்
சாப்பிடலாம் தப்பு எதுவும் கிடையாது.
எப்படி
செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான
பொருள்கள்கள்:
பன்னுக்கு
- மைதா மாவு 400 கிராம்
- முட்டை 1
- வெதுவெதுப்பான பால் 200 மில்லி
- வெண்ணெய் 70 கிராம்
- ஈஸ்ட் 2 டீஸ்பூன்
- உப்பு 11/2 டீஸ்பூன்
ஃப்ர்ஸி
- கொத்துகறி 200 கிராம்
- வெங்காயம் 2
- தக்காளி 10
- வேகவைத்த சோளம் 200 கிராம்
- மிளக்காய்தூள் 1 டீஸ்பூன்
- உப்பு
பன் ஃப்ர்ஸி செய்முறை:
1)முட்டையை
அடித்துக்கொள்ளவும்.
2)மைதாவில்
அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
3)பிறகு பாலை ஊற்றவும்.அதில்
ஈஸ்ட்டை போடவும். அதிலேயே உப்பும் போடவும்.
4)வெண்ணெய்
ரூம் டெம்பரேச்சரில் போட வேண்டும்.
5)இப்படி
எல்லாம் போட்ட பின்பு நன்றாக
பிசையவும்.
6) கையால் பிசைந்தாலும் சரி.
மிக்ஸி அல்லது MAP போட்டு
பிசைந்தாலும் சரி.
7)நன்றாக
பிசைந்து அப்படியே வைக்கவும்.
8)மாவு நன்றாக புளித்து பொங்கி
வரவேண்டும். மாவு இரண்டு பங்காக
ஆகவேண்டும்.
அதற்க்குள்
ஃப்ர்ஸியை ரெடியாக்கி கொள்ளவும்.
1)வெங்காயத்தை
வதக்கி மற்ற எல்லாவற்றையும் வதக்கி
தூளையும் போட்டு
2)நன்றாக எல்லம்
வதங்கி வாசனை வந்து வெந்ததும்,
இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
9)மாவு சரியான பதத்திற்கு வந்தவுடன்
எட்டு பாகமாக பிரித்துக்கொள்ளவும்.
10)பிரித்து
வைத்துள்ள மாவில் ஒரு உருண்டையை
எடுத்து உருட்டவும்.
11)நடுவில்
ஃப்ர்ஸியில் கொஞ்சம் வைக்கவும்.
12)நன்றாக
மூடி விடவும்.
13)இப்படியே
எல்லா உருண்டையையும் செய்து விடவும்.
14)அவணில்
வைக்க வேண்டிய தட்டில் தயார்
செய்த பன்னை வைக்கவும்.
15)அவணில்
தட்டில் வைத்த பன்னை துணியை
போட்டு மூடி வைக்கவும்.
16)பன் இரண்டு மடங்காக உப்பி
வரவேண்டும்.
17)அவணை
200°முற்சூடு செய்ய வேண்டும்.
18)உப்பி வந்ததும் முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.
19அவணில்
தட்டில் வைத்த பன்னை துணியை
போட்டு மூடி வைக்கவும்.
20)பன் இரண்டு மடங்காக உப்பி
வரவேண்டும்.
21)அவணை
200°முற்சூடு செய்ய வேண்டும்.
22)உப்பி வந்ததும் முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.
23)20 - 25 நிமிடஙகள்
வைத்தால் போதும்.
நன்றாக
சிவந்து வரவேண்டும்.
வெளியே எடுத்து விடவேண்டும்.
பன் ரெடி.
copyright©Aug2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment