தாய்மை அனுபம் 24
இரண்டரை
வயதுக்கு மேல் பிள்ளைகளுக்கு துள்ளி
விளையாடும் பருவம் என்று இரண்டரை
வயதில் குழந்தை நன்றாக
நடக்கும் தான் அதில் எந்த
விதமான மாற்றங்களும் இல்லை.
சில பிள்ளைகள் கொஞ்சம் தாமதம் ஆகலாம்.
இது அவர்களின் மூளை வளர்ச்சியை பொருத்தது..குணநலன்களை பொருத்தது.
சில பிள்ளைகள்,குழந்தைகளாக இருக்கும்போது நிறைய நோய்கள் வந்தாலும்
வளர்சில் மற்ற பிள்ளைகளை விட
தாமதமாக தான் இருக்கும். சில
பிள்ளைகள் நடப்பது, பேசுவது 7 வயது
கூட ஆகலாம்.
அதனால்,
பெற்றோர்கள் கவலைப்பட தேவை அதே சமயம்
டாக்டரிடம் பிள்ளையை காட்டாமல் இருக்க வேண்டாம்.
பிள்ளைகள்
இரண்டரை வயதில் குதிக்காலால் கொஞ்சம்
தொலைவு நடப்பார்கள் என்று சொன்னேன் அல்லவா?
மூன்று வயதில் ஒரு அறை
முழுதும் குதிக்காலால் அவர்களால் நடக்க முடியும்.
உங்கள்
கையை பிடிக்காமல் அவர்களால் தனியாக நடக்க முடியும்.
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.
எப்போதும் பிள்ளைகள் கையை பிடித்து நடக்கும்
போது,எப்போதும் மணிக்கட்டை பிடித்து நடக்கவும்.அப்போதுதான்,ரோட்டை கடக்கும் போதும்கூட
கையை நழுவ விட்டு பிள்ளைகள்
ஓடாமல் இருப்பார்கள். உள்ளங்கையை பிடித்து நடந்தால்,பிள்ளைகள் கையை உதரி விட்டு
ஒட முடியும்.
அதனால்தான்
கையின் மணிக்கட்டை பிடித்து நடக்க வேண்டும். என்று
சொன்னேன்.
இந்த வயதில் பிள்ளைகள்
படிக்கட்டுகளில் நன்றாக ஏறுவார்கள். அதனால்,வீட்டில் படிக்கட்டுகள் இருந்தால்,கவனமாக இருங்கள்.
நீங்கள்
கேட்கும் பல கேள்விகளுக்கு பதில்
அவர்கள் பதில் கொடுக்க தெரியும்.
பதில் சொல்ல நேரம் கொடுங்கள்.
யோசித்து சொல்ல விடுங்கள்.
உங்களிடம்
நிறைய நேரம் பேசவேண்டும் என்று
நினைப்பார்கள். பொறுமையாக அவர்களுடன் நிறைய நேரம் செலவிடுங்கள்.
வெளியில்
செல்லும் போது அவர்களுடன் இயறக்கையுடன்
வாழ நிறைய கற்றுக்கொடுங்கள். அதுதான்
வாழ்க்கைக்கு நல்லது.
அவர்கள்
வாழ்நாள் முழுதும் எப்படியும் வாழப்போவது பலமாதிரியான இயந்திரத்துடந்தான்.அதனால்தான் சொல்கிறேன். கொஞ்சமாவது நாம் இயற்கையைப்பற்றி தெரிய
படுத்துங்கள்.
பிள்ளைகளுடன்
பூங்காவிற்க்கு போகும்போது பலவிதமான இலைகளை சேகரித்து வரலாம்.அதனை ஒரு தாளின்
பின் பகுதியில் வைத்து முன் பகுதியில்
பென்சிலால் தேய்தால் அந்த இலையை போலவே
வரும். அது பிள்ளைகளுக்கு ஒரு
விளையாட்டு.
அந்த இலையின் பெயர்
என்ன என்று விளையாட்டாகவே சொல்லிக்கொடுங்கள்.
முதலில் சுலபமான மரம் செடி
கொடிகளின் பெயர்கள் போதும்.
பென்சில்
கொடுக்கும்போது பென்சிலின் முனை கூராக இல்லாமல்
பார்த்துக்கொள்ளுங்கள். வேலை முடிந்ததும் இலையும்
அப்புறப்படுத்த மறந்து விடவேண்டாம்.
பிள்ளைகள்
ஊஞ்சல்,மூன்று சக்கர சைக்கிள்
போன்ற விளையாட்டுகள்
விளையாட
ஆசைப்படுவார்கள்.
நிறைய சின்ன சின்ன பாடல்கள்
சொல்லிக்கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக நாம் சொல்லிக்கொடுப்பதை திருப்பவும்
பாடுவார்கள்.
இரண்டரை
வயதுக்கு மேலுள்ள பிள்ளைகளுக்கு காய்கறிகள்,
பழகள் வேகவைக்கமாலும் தரலாம்.
உதாரணமாக:
கேரட் மெல்லியதாக துருவியது,பீட்ரூட் சிறியதாக வெட்டியது அல்லது மெல்லியதாக துருவியது.
ஆரஞ்சு
பழம்,ஆப்பிள் பழம் வெட்டி
கொடுக்கலாம்
எல்லாவிதமான
உணவுகளையும் கொடுக்கலாம். எல்லா மீன் வகைகளும்,கறி வகைளும் தரலாம்.
தயவுசெய்து
கடினமான மிட்டாய்களை கொடுக்காதீர்கள். அது பிள்ளைகள் தொண்டையில்
மாட்டிக்கொள்ளும். நம் நாட்டில் இது
ஒரு பெரிய அன்பு தொல்லை.
சின்னப்பிள்ளைகளை கண்டால், உடனே மிட்டாய் கொடுப்பது.
இது தவிர்த்தால் நல்லது.
இங்கு பிள்ளைக்களை குளிப்பாட்டி விடுவது:பிள்ளைகள் பள்ளிக்கூடம்
போவதற்கு முன்பு அவர்களை
குளிப்பாட்டுவது காலையில். அதுவே, பிள்ளைகள் பள்ளிக்கூடம்
போக தொடங்கி விட்டால், அவர்களை
குளிப்பாட்டுவது மாலையில் இரவு சாப்பாடிற்கு முன்பு.
பிறகு சாப்பாடு கொடுத்து தூங்க வைத்து விடுவோம்.
தப்பு செய்தால் கண்டிக்க தயங்க வேண்டாம். பிடிவாதம்
அதிகமாக வரத்தொடங்குவது இந்த வயதில்தான்.
அவர்கள்
பிடிவாதம் பிடித்தால் அதற்கு நீங்கள் அவர்கள்
இஷ்டதிற்கு போகாதீர்கள். அவர்களை சற்று நேரம்
விட்டு விடுங்கள். தானாகவே நம்மிடம் வருவார்கள்.
இப்பொழுதிலிருந்தே
அவர்கள் தப்பை திருத்த சின்ன
தண்டனைகள் கொடுக்கலாம் தப்பு கிடையாது.
இன்னும்
வளர்க்கலாம்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment